Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் விரைவு தரிசனம் திடீர் ... திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஏகாதசி திருமஞ்சனம் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழை காத்தம்மன் கோயில் விழா: மதுக்கலயம் ஏந்தி பெண்கள் ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2016
10:09

மேலுார்: மேலுார் வெள்ளலுாரில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் திருவிழாவில் பெண்கள் மதுக்கலயம் ஏந்தி ஊர்வலமாக சென்று வழிபட்டனர். இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

Default Image
Next News

மதுரை மேலுாரை அடுத்து வெள்ளலுார் அருகே கோயில் பட்டியில் ஏழை காத்தம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத் திருவிழாவை முன்னிட்டு 60 கிராமங்களை சேர்ந்த 7 குழந்தைகள் செப். 13ல் தேர்வு செய்யப்பட்டு வெள்ளலுார் கோயில் வீட்டில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தனர். நேற்று வெள்ளலுார் கோயில் வீட்டில் இருந்து 11 பிரிவுகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள் மற்றும் இளங்கச்சிகள் தலைமையில் (இளைஞர்கள்) 8 கி.மீ., தொலைவில் உள்ள கோயில்பட்டி ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து சென்றனர்.

அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல்பிரி சுற்றியும், குழந்தை வரம் கேட்டவர்கள் பதுமைகள் மற்றும் பூக்கொடைகளை சுமந்து சென்று நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பூஜாரி சின்னதம்பி தலைமையில் அம்மனாக பாவிக்கும் ஏழு குழந்தைகள் மாலை மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்னர். விழாவின் கடைசி நாளான இன்று (செப்.28ல்) தேரோட்டமும், செப்.29ல் மஞ்சள் நீராட்டும், அக்.4ல் பெரிய மது குலைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவில் மேலுார் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar