திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, காருகுடி கிராமத்திலுள்ள கைலாசநாதர் கோயில் விநாயகர் ஆகாயத்தை பார்த்தபடி காட்சி தருகிறார். இளம் பச்சை மற்றும் இளம் கருப்பு நிறம் கொண்ட ஒரே கல்லினால் ஆன விநாயகரின் உருவம் இது. கிரக தோஷ பாதிப்புக்கு உள்ளானவர்கள் இவரைத் தரிசித்து பலன் பெறலாம்.