பதிவு செய்த நாள்
29
செப்
2016
11:09
ஆர்.கே .பேட்டை: அனுமன்கோ வில் உண்டியலை உடைத்து, பணம் கொள்ளை போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆர்.கே .பேட்டை , இஸ்லாம் நகர் பகுதியில் உள்ளது, அனுமன் கோவில். சுவாமி தரிசனத்திற்காக, நேற்று காலை வந்த பக்தர்கள், கோவில் உண்டியலில் உடைப்பு நடந்திருப்பதை அறிந்து, அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலில், எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து தெ ரியவில்லை. கொள்ளையர்கள், கோவில் வளாகத்தில் இருந்த மின்விளக்கு இணைப்பை துண்டித்து, கொள்ளையை நடத்திஉள்ளனர். நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது, பகுதிவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.