நவராத்திரி இரண்டாம் நாள்(அக்.3) எவ்வாறு வழிபட வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2016 01:10
அம்பிகையை மயில்வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்றும், குமார கணநாதாம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பவள் இவள். மதுரை மீனாட்சியம்மன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் காட்சி தருகிறாள். மதுரையை ஆட்சி செய்த சுகுணபாண்டியன், மறுபிறவியில் கருங்குருவியாகப் பிறந்தான். மற்ற பறவைகள் துன்புறுத்தியதால் காட்டிற்கு பறந்த அக்குருவி, ஒரு மரத்தில் தங்கியது. அங்கு வந்த சிவபக்தர் ஒருவர், சிவநாமத்தை ஜெபிக்க கேட்ட குருவி ஞானம் அடைந்தது. குருவியும் மதுரை கோயிலுக்கு வந்து, குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டது. சிவனும் குருவிக்கு மந்திர உபதேசம் செய்தருளி, குருவியினத்தில் வலிமை மிக்க வலியன் குருவியாக இருக்க வரமளித்தார். இக்கோலத்தை தரிசித்தால் மன வலிமை உண்டாகும்.
நைவேத்யம்: தயிர் சாதம் தூவ வேண்டிய மலர்: முல்லை
பாட வேண்டிய பாடல்: தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவருக்கும் மேலை இறைவியுமாம் துவளேன் இனியொரு தெய்வ முண்டாக மெய்த் தொண்டு செய்தே.