பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகேயுள்ள மாகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி முதல் நாளான நேற்றுமுன்தினம் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மன், பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தினசரி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், நேற்றுமுன்தினம், அம்மன் விநாயகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினசரி மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், தினசரி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இரவு 7:00 மணிக்கு நடக்கின்றன. விஸ்வகர்மா ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், நல்லப்பா நகரிலுள்ள சவும்ய ஸ்வரூப சாயிநாதர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.