பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மன், பெருமாள் கோயில்கள் உட்பட பலரும் வீடுகளில் 9 படிக்கட்டுகளை அமைத்து அதில் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், மனிதன், ஆழ்வார்கள், தேவர்கள், கடவுள் உருவங்கள், இயற்கை தோட்டம் என பல்வேறு நிலைகளில் கொலு அமைத்துள்ளனர். இயற்கை தொடங்கி ஆறறிவு ஜீவன் வரை இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் தினமும் அம்மனை அலங்கரித்தும், பெண்கள் கோலாட்டம், பாட்டுப்பாடியும் மகிழ்கின்றனர். தொடர்ந்த 9 ம் நாளன்று அனைத்து கோயில்களிலும் வன்னிகாசுர வதம் நடைபெறும்.