பதிவு செய்த நாள்
03
அக்
2016
12:10
தேனி: தேனி நகராட்சி 19வது வார்டில் உள்ள கற்பக விநாயகர், முத்துமாரியம்மன் கோயில்,வேப்பிலை காளியம்மன் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெறவும், உள்ளாட்சியில் நுாறுசதவீத வெற்றி பெற வேண்டி 1008 சகஸ்கர கலச அபிஷேகம், சங்காபிஷேக பூஜை நடந்தது. வேப்பிலை காளியம்மனுக்கு 108லிட்டர் பால் அபிஷேகம்,மஞ்சள் அபிஷேகம் நடந்தது. முத்துமாரியம்மன்கோயிலில் சங்காபிஷேகம், ராஜராஜ சோழன் காலத்தில் தயாரிக்கப்பட்ட 1008 கலசங்களுக்கு பூஜைகள் நடந்தது. விழாவில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் கதிர்காமு, ஜக்கையன், பார்த்தீபன் எம்.பி., தேனி ஒன்றிய செயலாளர் கணேசன்,பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், இணைச்செயலாளர் முருக்கோடை ராமர், பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் முகுந்தன், தேனி நகராட்சி தலைவர் முருகேசன், துணைதலைவர் காசிமாயன், தொழில் அதிபர் லைப் சரவணக்குமார், முத்துராம், சோழா ஈஸ்வரன், சந்தானம், மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை 19வது வார்டு துணைச்செயலாளர் நாராயணபிரபு செய்தார்.