பதிவு செய்த நாள்
03
அக்
2016
12:10
தியாகதுருகம்: முதல்வர் ஜெ., விரைவில் உடல் நலம் பெறவேண்டி, சித்தலுார் கோவி லில் அ.தி.மு.க.,வினர் சிறப்பு பூஜை செய்தனர். இதனையொட்டி எம்.எல்.ஏ., பிரபு தலைமையில் 108 பெண் தொண்டர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். முதல்வர் ஜெ., விரைவில் நலம் பெற வேண்டி அர்ச்சனைகள் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தியாகதுருகம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அய்யப்பா செய்திருந்தார். மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய சேர்மன் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கோமுகி மணியன், அழகு வேலுபாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, இளை ஞரணி கிருஷ்ணமூர்த்தி, மீனவரணி ராமச்சந்திரன், நகர செயலாளர்கள் ஷியாம்சுந்தர், பாபு, நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவிந்தராஜ், குமார், மணிவண்ணன், மணி வேல், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வராஜ், இலக்கிய அணி செயலாளர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.