Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் ... தல்லாகுளம் பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2016
11:10

திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை ஒட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, 13 நாட்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான நவராத்திரி விழா, கடந்த, 1ம் தேதி துவங்கியது. நவராத்திரி விழாவை ஒட்டி, மூலவர் அம்மனுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. தொடர்ந்து, மாலையில், 6:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகின்றன. அப்போது, உற்சவர் மகிஷாசுரமர்த்தனி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று நடந்த நவராத்திரி விழாவை ஒட்டி, மூலவருக்கு, மாலையில் மஞ்சள் காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவு நடந்தன; உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 13ம் தேதி வரை, நவராத்திரி விழா இக்கோவிலில் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar