Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயில் பிரசாதத்திற்கு ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலு வழிபாடு துவக்கம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்

பதிவு செய்த நாள்

11 அக்
2026
10:10

மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று, மீனாட்சியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நவராத்திரி விழா ஆண்டுதோறும் அம்மனின் பல்வேறு திருவடிவங்களைப் போற்றும் வகையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று தொடங்கிய நவராத்திரி விழா அக்டோபர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளில் கொலு மண்டபத்தில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பக்தி இன்னிசை மற்றும் வீணை இசைக் கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் நடைபெற உள்ளன. நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதன்படி, அக்டோபர் 12ஆம் தேதி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்திலும், தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு அலங்காரங்களிலும் அம்மன் அருள்பாலிக்க உள்ளார்.


நவராத்திரி விழாவின் பத்து நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான மீனாட்சியம்மன் சன்னதியில் திரையிடப்பட்டு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் மூலஸ்தான அம்மனுக்குத் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை செய்யப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குப் பக்தர்கள் தேங்காய் உடைத்தும் அர்ச்சனை செய்தும் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நவராத்திரி விழாவையொட்டி, மீனாட்சியம்மனைத் தரிசிக்கவும், கொலு அலங்காரங்களைக் காணவும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். விழாவின் நிறைவாக அக்டோபர் 25ஆம் தேதி சாந்தாபிஷேகம் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar