பதிவு செய்த நாள்
08
அக்
2016
12:10
திருத்தணி: முருகன் கோவில் திருக்குளத்தில் வீசும் துர்நாற்றத்தால், நீராட முடியாமல் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, படிகள் வழியாக செல்லும் மலையடிவாரத்தில் சரவணப்பொய்கை என்கிற திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில் நீராடியபின், மலைக் கோவிலுக்கு செல்வது வழக்கம். சில பக்தர்கள், மொ ட்டை அடித்து, இங்கு குளிப்பதும் உண்டு. இந்நிலையில், திருக்குளத்தில் உள்ள தண்ணீரில் பாசி படர்ந்து, பச்சை நிறமாக உள்ளது. இதனால், பெ ரும்பாலான பக்தர்கள், குளத்தில் குளிப்பதற்கு முகம் சுளிக்கின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதால் சிரமப்படுகின்றனர். குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி, தண்ணீரை சுத்தம் செய்ய, கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.