முதல்வர் நலம் வேண்டி பிள்ளையார்பட்டி கோயிலில் ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2016 12:10
திருப்புத்துார், :தமிழக முதல்வர் ஜெ., விரைவில் குணமடைய பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை ஹோமம் நடத்தப்பட்டது.ஸ்ரீதர் குருக்கள் ஹோமத்தை துவக்கி வைத்தார்.கோயில் யாகசாலையில் இந்த ஹோமம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலர்,எம்.பி., செந்தில்நாதன், மாவட்ட ஜெ.பேரவை செயலர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு பிரார்த்தனையின் ஒரு பகுதியாக நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது.