பதிவு செய்த நாள்
11
அக்
2016
02:10
ஈரோடு: ஈரோட்டில், கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது. ஈரோடு கோட்டை பெருமாள், கஸ்தூரி அரங்நாதர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 4ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி, யாகசாலை பூஜைகள், திருமஞ்சனம் சாத்துபடி நடந்து வருகிறது. மாலையில் அன்னவாகனம், சிம்மவாகனம், கருடசேவை, யானைவாகனம், புஷ்ப பல்லக்கு என தினமும், திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று நடக்கிறது. இதற்காக தேரை, தயார் படுத்தும் பணி துரிதமாக நடக்கிறது.