பதிவு செய்த நாள்
11
அக்
2016
02:10
ஈரோடு: ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ஈரோடு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை ஓட்டி ஈரோட்டில் உள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், கோட்டை கபாலீஸ்வரர் கோவில், கள்ளுக்கடை மேடு ஆஞ்சநேயர் கோவில், மூலப்பாளையம் பாரதி நகர் ராஜ கணபதி கோவில் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் நவராத்திரி கொலு மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ராஜகணபதி கோவிலில் உள்ள சரஸ்வதி சிலைக்கு, ஒன்பது வகை மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்து, லலிதா சகஸ்ரநாம வழிபாடு நடந்தது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் ஆகியவற்றை வேண்டி, மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளில் சரஸ்வதி படத்துக்கு முன்னால், பாட புத்தகங்களை வைத்து வழிபட்டனர்.