கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் கோயிலில் ஸ்ரீகிரிகுஜாம்பிகை சன்னிதியில் அம்பாளுக்கு இருபுறமும் மகாலட்சுமியும், சரஸ்வதியும் காட்சி தருகின்றனர். இதேபோல் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலும், வேளச்சேரி தண்டீசுவரர் கோயிலிலும் துர்கா, லட்சுமி சரஸ்வதி ஆகிய மூவரும் ஒரே சன்னிதியில் தரிசனம் தருகின்றனர்.