ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆயுத பூஜை, சிறப்பு வழிபாடு நடந்தது.
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆயுத பூஜையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்தனர். இதே போல் திருவரங்கத்தில் உள்ள பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, மகா தீபாராதனை நடந்தது.