இளையான்குடி, இளையான்குடியில் சில வாரங்களாக,மழை பெய்யாததால் பயிர்கள் கருகின.பயிர்களை காப்பாற்ற மழை வேண்டி கிராம மக்கள் முளைப்பாரி விழா கொண்டாடி வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் முளைப்பாரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று முன் தினம் மட்டும் கலைக்குளம், மேலத்துறையூர், விளாங்குளம், சோதுகுடி, ஒச்சந்தட்டு, அரண்மனைக்கரை, வல்லக்குளம், கொங்கம்பட்டி உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் முளைப்பாரி விழா கொண்டாடப்பட்டது.