அகர முத்தாலம்மன் கோயிலில் அக்.17ல் கண்திறப்பு வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2016 12:10
திண்டுக்கல், திண்டுக்கல் அகர முத்தாலம்மன் கோயில் உற்சவ திருமுகத்தையொட்டி அம்மன் கண் திறப்பு வைபவம் அக்.,17ல் நடக்கிறது. திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோயிலில் உற்வசத் திருமுகம் விழா துவங்கியது. அக்.,9ல் கண்திறப்பு மண்டபத்தில் சாட்டுதல் நடந்தது. மறுநாள் முதல் அக்.,16 வரை, கோயிலில் இருந்து பண்டாரப் பெட்டியும், அம்மன் உற்சவரும் கொலு மண்டபத்தில் எழுந்தருள்வர். அக்.,17ல் காலை 10:30 மணிக்கு கண்திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. அன்று அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருள்வார். இரவு 12:00 மணிக்கு அம்மன் புஷ்ப விமானத்தில் வாணக் காட்சி மண்டபத்தில் எழுந்தருள்வார். இந்நிகழ்ச்சியில் பலஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். அக்., 18ம் தேதி மதியம் 1:30 மணிக்கு அம்மன் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலையில் எழுந்தருள்வார். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை பரம்பரை நிர்வாக அறங்காவலர் சு.ம.மாரிமுத்து, அகரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல், செயல்அலுவலர் ரவிசங்கர், தாடிக்கொம்பு செயல் அலுவலர் சுதர்சன் செய்துள்ளனர்.