கரூர்: கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில், கடந்த, 29 ம் தேதி புரட்டாசி திருவிழா துவங்கியது. அன்று முதல் தினமும் வெங்கடரமண சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. கருடசேவை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. நாளை புரட்டாமி ஐந்தாவது மற்றும் கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.