பதிவு செய்த நாள்
03
அக்
2011
11:10
சோழவந்தான் : சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் விசாக நட்சத்திர உற்சவம் நடந்தது. கோயிலில் நேற்று முன் தினம் மாலை ரவிச்சந்திரன், வரதராஜபண்டிட் சிவாச்சாரியார்கள் பிரளயநாதருக்கும், சனீஸ்வர பகவான், சுயம்புகாசிலிங்கத்திற்கும் 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின் சுவாதி, சித்திரை, விசாகம், புனர்பூசம், உத்திரம், கேட்டை நட்சத்திரங்களை சேர்ந்த பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள், பரிகார பூஜைகள் நடந்தன. விசாக நட்சத்திர உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அறங்காவலர் நாராயணன், நிர்வாக அதிகாரி அருள்செல்வம், ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்தனர்.