பதிவு செய்த நாள்
27
அக்
2016
11:10
ஜலகண்டாபுரம்: தோரமங்கலம், ஓங்காளியம்மன் கோவிலில், 48ம் நாள் மண்டபூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. ஜலகண்டாபுரம் அடுத்த, தோரமங்கலம், ஓங்காளியம்மன் கோவில், மஹா கும்பாபிஷேக விழா, கடந்த மாதம் 8ல் நடந்தது. அதைத்தொடர்ந்து, 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், ஓங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.