பதிவு செய்த நாள்
01
நவ
2016
12:11
விழுப்புரம்: வளவனுார் குமாரபுரி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவி லில், கந்த சஷ்டி விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை ௬:௦௦ மணிக்கு விக்னேஷ்வர பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இன்று மூலவருக்கு சந்தனகாப்பு மகா தீபாராதனையும், ௨ம் தேதி விபூதி காப்பு, ௩ம் தேதி புஷ்பாஞ்சலி, ௪ம் தேதி பராசக்தி அன்னையிடம், முருகன் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து ௫ம் தேதி காலை கலச பூஜை திரிசதிவேள்வி, தங்கத்தேர் திருக்கோவில் உலா, ஆறுமுகப்பெருமாள் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பின், ௬ம் தேதி திருக்கல்யாண வைபவம் மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது.