பதிவு செய்த நாள்
01
நவ
2016
12:11
தொடுகாடு: தொடுகாடு ஊராட்சியில் உள்ள, வேணுகோபால நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வரும் 6ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சிக்குட்பட்ட நமச்சிவாயபுரம். இங்குள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், மகா சம்ப்ரோக்ஷணம், வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, வரும் 4ம் தேதி, மாலை 6:00 மணிக்கு அங்குரார்பணமும் மற்றும் வேதப்ரபந்த தொடக்கமும் நடைபெறும். பின், 5ம் தேதி, காலை 8:00 மணிக்கு, மகா கும்பஸ்தானமும், பூர்ணாஹூதியும், சாற்றுமுறையும் நடைபெறும்,. அன்று மாலை 4:00 மணிக்கு, விசேஷ அபிஷேகமும், 17 கலச திருமஞ்சனமும் நடைபெறும். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சதுஸ்த்தாணார்ச்சனமும், தத்வ ஹோமமும் நடைபெறும்.பின், வரும் 6ம் தேதி, காலை 6:00 மணிக்கு விஸ்வரூபமும், சாந்தி ஹோமமும், மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கும்ப புறப்பாடும் நடைபெறும். அதன்பின், காலை 9:00 மணிக்கு, மேல் 10:30 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷமும், வேத ப்ரபந்த சாற்றுமுறையும், நடைபெறும்.