காவிரி அன்னை ரத யாத்திரை: பக்தர்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2016 12:11
குமாரபாளையம்: குமாரபாளையம் நகரில் காவிரி ஆற்றில் காவேரி அன்னை ரத யாத்திரை நடந்தது. அகில பாரத துறவியர் சங்கம் சார்பில், காவிரி நீரை தூய்மைபடுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரை சேலம், கொடுமுடி, திருச்சி, மயிலாடுதுறை வழியாக சென்று வரும், 13ல் நிறைவு பெற உள்ளது. குமாரபாளையம் அடுத்த சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், காவேரி அன்னையின் ரத யாத்திரை விழாவையொட்டி காவிரி அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், காவிரி பாதுகாப்புக்குழு அமைப்பாளர் ராமானந்த சுவாமி உட்பட பலர் பங்கேற்றனர்.