ராசிபுரம்: ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா, சிறப்பாக நடந்து வருகிறது. ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆண்டு தோறும், தேர்த்திருவிழா நடக்கும். அதன்படி, நடப்பாண்டில் விழா துவங்கப்பட்டு, பல்வேறு சமூகத்தினர் சார்பில், தங்கள் கட்டளையாக, சுவாமியை திருவீதி உலா அழைத்து வருகின்றனர். நேற்று முன்தினம், 12வது நாளாக, வேலாயுதசுவாமி கோவிலில் எழுந்தருளிய அம்மனை, அலங்கரித்து திருவீதி உலாவாக மேளதாளம் முழங்க பவனி வந்து, மாரியம்மனை கோவிலுக்கு அழைத்த வந்தனர்.