பவளகிரீஸ்வரர் கும்பாபிஷேகம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2016 02:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா கூறியதாவது: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, பவளக்குன்று மலையின் மேல் அமர்ந்து பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து, தவமிருந்து இடபாகம் பெற்றார் என, தல புராணங்கள் கூறுகின்றன. இந்த மலையில் முக்தாம்பிகை சமேத பவளகிரீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன. இவை, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இவை தற்போது ரமணா ஆஸ்ரமம் உபயம் மூலம், எட்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வரும், 7ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.