பதிவு செய்த நாள்
05
நவ
2016
02:11
வேலூர்: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த, கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நவக்கிரஹ தோஷங்கள் நீங்கி, வாழ்வில் எதிர் வரும் தொல்லைகள் விலகி, நன்மை பெற, லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி ஹோமம் நடந்தது. இதில், பங்கேற்ற, 15க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள், நவக்கிரஹங்களில் உள்ள ஒவ்வொரு கிரஹங்களுக்கும், ஒன்பது தசா புத்திகளுக்கு, 10 ஆயிரம் ஜபம் வீதம் மொத்தம், ஒரு லட்சம் மூல மந்திரம் ஜெபிக்கப்பட்டன. இதையொட்டி, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்தந்த கிரஹத்திற்குரிய தானியங்கள், பழங்கள், மலர்கள், பட்சணங்கள் கொண்டு தேன், நெய், விசேஷம் மூலிகைகள் சேர்க்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் யாகத்தில், கால சக்கரமாக பீடத்தில் அமைந்துள்ள நவக்கிரஹ, ராசி, நட்சத்திர விருட்சங்களுக்கு விருட்சபூஜை, கால சக்கர பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை முரளிதர ஸ்வாமிகள் செய்தார்.