நாமகிரிப்பேட்டை: கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பை, தண்ணீர்துறை பஸ் ஸ்டாப்பில் புதியதாக வலம்புரி விநாயகர் கோவில் அமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் துவங்கியது. பூமாதேவி சிலையை மண் மூலம் செய்து வழிபாடு செய்தனர். நேற்று காலை யாக பூஜையில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, சிவன்குன்று பகுதியை சேர்ந்த இளைஞர்கள், கோவிலுக்கு பின், ருத்ராட்சை, நாகலிங்கம், திருவோடு, மந்தாரை உள்ளிட்ட மரங்களை நட்டு வழிபாடு செய்தனர்.