பதிவு செய்த நாள்
07
நவ
2016
12:11
கடம்பத்துார்: கடம்பத்துாரில் உள்ள கடம்பவன முருகனுக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. கடம்பத்துார் அடுத்த, ஸ்ரீதேவிக்குப்பத்தில் உள்ளது வள்ளி, தெய்வானை சமேத கடம்பவன முருகன் கோவில். இந்த கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா, கடந்த, 31ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது. பின், தினமும் காலை, வள்ளி, தெய்வானை சமேத கடம்பவன முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி, தெய்வானை சமேத கடம்பவன முருகனுக்கு திருக்கல்யாணம், நேற்று, காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடந்தது. இதில், கடம்பத்துார், ஏகாட்டூர், ஸ்ரீதேவிக்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் பங்கேற்றனர்.