பதிவு செய்த நாள்
08
நவ
2016
11:11
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார், திருத்தேரில் நேற்று வீதியுலா சென்றார். பன்னிரு ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவரான பூதத்தாழ்வார், மாமல்லபுரத்தில் அவதரித்து, இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதியில் வீற்றுள்ளார். இக்கோவிலில், அவரது அவதார உற்சவம், 30ம் தேதி துவங்கி, தினமும் அபிஷேகம், திருமஞ்சனம் மற்றும் சேவைகள், வீதியுலா நடைபெறுகின்றன. நேற்று, ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில், அவர் தேரில் வீதியுலா சென்றார். வழக்கமான கோவில் வழிபாட்டைத் தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட பூதத்தாழ்வார், காலை, 7:15 மணிக்கு, அலங்கார தேரில் எழுந்தருள, அவருக்கு, ஸ்தலசயன பெருமாள் மரியாதை அளித்து, நைவேத்யம் படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, வீதியுலா புறப்பட, பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, வடம்பிடித்து தேர் இழுத்தனர். வீதிகளில், பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.