பதிவு செய்த நாள்
08
நவ
2016
12:11
அந்தியூர்: அந்தியூர், மைக்கேல்பாளையம் கிராமத்தில், பகவதி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம், வரும், 11 ல் நடக்கிறது. முன்னதாக, 10ல் கணபதி ஹோமம், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வருதல், வாஸ்து சாந்தி பூஜை, பாலிகை பூஜை, மூலமந்திரம் ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி நடக்கிறது. நவ.,11ல் காலை, 7:25 மணிக்குள், கும்பாபிஷேகம் நடக்கிறது.