உளுந்துார்பேட்டை: பு.கொணலவாடி கோவிலில் சுவாமிக்கு, சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, பு.கொணலவாடி கிராமத்திலுள்ள ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 10:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடு களை விழா குழுவினர் செய்திருந்தனர்.