Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்வாமி தேசிகன்
ஸ்வாமி தேசிகன்
எழுத்தின் அளவு:
ஸ்வாமி தேசிகன்

பதிவு செய்த நாள்

10 நவ
2016
12:11

காஞ்சி க்ஷேத்ரத்தில் தூப்புலில் அவதரித்தவர், ஸ்வாமி தேசிகன். இவர் தகப்பனார் அனந்த சூரி, தாயார் தோதாரம்பாள். இவர் திருவேங்கடமுடையானின் கண்டாம்சமாக (மணி) போற்றப்படுவர். புரட்டாசி திருவோணம் இவரது அவதாரதினம். இவர் எல்லா கிரந்தங்களையும் அப்புள்ளாரிடமிருந்து கற்றார். அவரிடமிருந்து கருடமந்திரத்தை உபதேசம் பெற்று கருடனை உபாசித்து அவரது கிருபையால் ஹயக்ரீவர் அருளைப் பெற்றார். மூன்று மத நூல்களிலும் நன்கு தேறி ராமானுஜ மதத்தை ரட்சித்த மகான். இவரது குமாரர் நயினாராசார்யன். இவர் சிலகாலம் திருவஹீந்திரபுரத்திலும் காஞ்சியிலும் வசித்து திருவரங்கத்தில் பல ஆண்டுகள் அரங்கனது அடிவாரத்தில் வசித்து வைணவம் வளர்த்தார். திருவரங்கனைக் காப்பாற்றி திருவரங்கத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்ய முக்கியக் காரணமாய் இருந்தார். மிக விரிவாக சாஸ்திர நூல்களையும் காவியங்களையும் எழுதியவர். இவருடைய சிஷ்யர்களில் பரகால மட ஸ்தாபகரான ப்ரும்மதந்த்ர ஜீயர் முக்கியமானவர். ஸ்வாமி தேசிகருக்கு அரங்கநாச்சியார் சூட்டிய பெயர் வேதாந்தர சார்யார். அரங்கநாயகித் தாயார் சன்னிதிக்கு எதிரே இவர் சன்னிதி அமைந்துள்ளது.

இவர் ரஹஸ்ய த்ரயஸாரம், அமலனாதிபிரான் வ்யாக்யானம், ஸாரஸாரம், ரஹஸ்ய சிகாமணி, ரஹஸ்ய ரத்னாவளீஹ்ருதயம், ஸம்ப்ராதாய பரிசுத்தி, ப்ரதான சதகம், அபயப்ரதான ஸாரம், உபகாரஸ்ங்க்ரஹம், விரோத பரிஹாரம், பரமபத ஸோபானம், பரமத் பங்கம், பிரபந்தஸாரம், ஆஹாரநியமம், தத்வத்ரயம், சததூஷணி, ஸர்வார்த்த ஸித்தி, த்தவமுக்தா கலாபம், ஸ்தோத்ரபாஷ்யம், பாஞ்சராத்ர ரக்ஷை, ந்யாஸதிலகம், பகவத் த்யான ஸோபனம், அபீதிஸ்தவம், தசாவதார ஸ்தோத்ரம், கோதாஸ்துதி, ஸ்ரீஸ்துதி, யதிராஜஸப்ததி (ராமானுஜரைப் பற்றியது) த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, கருடபஞ்சாசத், சங்கல்ப ஸூர்யோதயம், ந்யாய பரிசுத்தி, கீதாபாஷ்ய தாத்பர்ய சந்திரிகை சதுச்லோகீ வ்யாக்யானம், அதிகரண ஸாராவளி, தத்வடீகை, பாதுகாஸஹஸ்ரம் மீமாம்ஸா பாதுகை, ஸேச்வர மீமாம்ஸா யாதவாப்யுதயம், வேதார்த்த ஸங்கிரஹ வ்யாக்யானம், ஹம்ஸ ஸந்தேசம், ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கோபாலவிம்சதி, கருட தண்டகம் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட கிரந்தங்களைச் செய்தருளியுள்ளார். இவர் அநேக மாயாவதி வித்வான்களை வென்றவர். திருவஹீந்திரபுரத்தில் சேவை சாதிக்கும் இவரது விக்ரஹம் இவரால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட தானுகந்த திருமேனியாகும்.

வைணவத்தில் பல சிம்மங்கள் உண்டு என்பதை யாவரும் அறிந்திருப்பர். நரஸிம்மம், ராகவ சிம்மம், யதுஸிம்மம் என்று தசாவதாரங்களில் குறிப்பிடுவர். பகவத் ராமானுஜரோ யதி சிம்மம். அவர் மீது பக்தி கொண்ட ஸ்வாமி தேசிகனோ கவிதார்க்கிக் சிம்மம் என்று புகழ் பெற்றவர். இவரது அவதார நன்னாளும் திருமலை பிரம்மோத்ஸவ சக்ரஸ்நான நன்நாளும் அநேகமாக ஒன்றாய் அமையும் அல்லது விஜயதசமி நன்னாளாகவும் அமையும். காஞ்சி தூப்புல் தீபப்பிரகாசர் சன்னிதி, காஞ்சி வரதாஜப் பொருமாள் திருக்கோயில், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில், திருவஹீந்திரபுரம் தேவனாதஸ்வாமி திருக்கோயில்களிலும் மற்றும் அநேக திருமால் திருக்கோயில்களிலும் இவரது அவதார நன்னாள் 10 நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படும். இவ்வைபவங்களில் கலந்துகொண்டு குருவருளும் திருவருளும் பெறலாம்!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar