பதிவு செய்த நாள்
11
நவ
2016
11:11
காடையாம்பட்டி: சின்னத்திருப்பதி கோவில் உண்டியலில், 12 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலானது. ஓமலூர், காருவள்ளி சின்னத்திருப்பதியில் உள்ள, வெங்கட்ரமண கோவிலில், புரட்டாசி முடிந்ததையடுத்து, நேற்று, கோவில் வளாகத்தில், இந்துசமய அறநிலையத்துறை, சேலம் உதவி ஆணையர் சபர்மதி, செயல் அலுவலர் அசனாம்பிகை தலைமையில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. தற்காலிக உண்டியல், பண்டிகை உண்டியல், நிரந்தர உண்டியல் என, 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு, ஜெய் நந்தகம் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், 30க்கும் மேற்பட்டோர், காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 91 கிராம் தங்கம், 290 கிராம் வெள்ளி, 12 லட்சத்து, 53 ஆயிரத்து, 867 ரூபாய் காணிக்கை இருந்தது.