மேல்மலையனுார் தாலுகா, வளத்தியில் உள்ள மங்களாம்பிகை உடனுறை மருதீஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் 14ம் தேதி மாலை 5:30 மணிக்கு, மருதீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.