பதிவு செய்த நாள்
11
நவ
2016
11:11
புத்தூர்: புத்தூர் அக்ரஹாரம், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது. வீரபாண்டி, புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ள, மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதையொட்டி, நவ., 8ல், வாஸ்து சாந்தி செய்து, கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, பெரியூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக, தீர்த்தக்குடங்களை எடுத்துவந்தனர். மாலையில், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு, கோபுர பதுமைகளுக்கு கண் திறப்பு, கோபுர கலசங்களில் தானியங்களை சேர்த்து சிறப்பு பூஜை செய்து, கோபுரத்தில் கலசம் வைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கி, 6:00 மணிக்கு அம்ஸார் கும்பாபிஷேகம், 7:00க்கு, யாகசாலை பூர்ணாஹூதி பூஜை, 7:30க்கு மேல், 8:00 மணிக்குள், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறும். 8:15க்கு, மூலவர் மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படும்.