மூணாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பூர்ண நலம் பெற வேண்டும் என அ.தி.மு.க., வினர் கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயிலில் வழிபட்டனர்.அண்ணா தோட்டத் தொழிலாளர்கள் சங்க இடுக்கி மாவட்ட செயலாளர் ராஜப்பன் தலைமையில்,கட்சியின் பொதுகுழு உறுப்பினர் பழனிசாமி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சோலைமுருகன், மூணாறு பகுதி தொழிற்சங்க தலைவர் தம்பிதுரை, செயலாளர் முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் இதில் ஈடுபட்டனர்.