பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேம் நடந்தது. சேத்தியாத்தோப்பு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பழமை வாய்ந்த மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை மங்களவாத்தியம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், லட்சுமி ேஹாமம், தனபூஜை, மதியம் 12.00 மணிக்கு திரவிய ேஹாமம், பூர்ணாகுதி, புனித தீர்த்தம் கொண்டு வந்து தீபாராதனை நடைபெற்றது. மாலை யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, இரவு யந்திர பிரதிஷ்டை, மருந்து சாற்றப்பட்டது. நேற்று காலை பிரம்ம சுத்தி ரஷாபந்தனம், வேதிகா அர்ச்சனை, கோ பூஜை, கஜபூஜை, லட்சுமி பூஜை, கன்னிகா பூஜை, திரவிய ேஹாமம் ஷன்னாவதி ேஹாமம், இரண்டாம் கால மஹா பூர்ணாகுதியை தொடர்ந்து காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.30 மணிக்கு விமான கலசத்திற்கும், 10:00 மணிக்கு மூலவர் மகாலிங்கேஸ்வர சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.