பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
கிருஷ்ணராயபுரம்: நத்தமேடு பகுதியில், கட்டபட்டுள்ள முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மணவாசி பஞ்சாயத்து நத்தமேடு பகுதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு, புதியதாக முத்தளாம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதில், பாரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன் மற்றும் சிம்ம வாகனத்துடன் நிறுவப்பட்டுள்ளன. கடந்த, 9ல் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர் எடுத்து கொண்டு வரப்பட்டு, நேற்று பல்வேறு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு காலை, 8:35 மணியளவில், முத்தளாம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கோலாகலமான கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மணவாசி, நத்தமேடு, கோரக்குத்தி, மேட்டுகிணம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.