பதிவு செய்த நாள்
11
நவ
2016
12:11
மொடக்குறிச்சி: கார்த்திகை மாத தீபத்திருவிழா நெருங்கி வருவதால், மொடக்குறிச்சி வட்டாரம், 46 புதூரில், அகல் விளக்கு உற்பத்தி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இதுகுறித்து அகல்விளக்கு உற்பத்தியாளர் பூசப்பன் கூறியதாவது: கார்த்திகை தீபத்திருவிழா அன்று ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்றுவதால், பல்வேறு நன்மைகள் கிடைப்பதோடு, வாழ்வின் இருள் அகன்று பிரகாசம் பெறும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த வகையில் வரும் டிச., 12ல் கார்த்திகை தீபத்திருவிழா நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. களி மண்ணில் செய்த, நெய்தீப விளக்கு, அகல் விளக்கு, மூன்று மற்றும் ஐந்து திரி விளக்கு, நட்சத்திர விளக்கு, மயில் விளக்கு, யானை விளக்கு உள்ளிட்ட பல விளக்குகளை தயாரித்து விற்பனை செய்கிறோம். கார்த்திகை தீபத்திற்கு, ஒரு லட்சம் விளக்குகள் உற்பத்தி செய்து, உள்ளூரிலேயே அனைத்தையும் விற்பனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.