ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் வைகுண்டு ஏகாதசி விழா வரும் ஜனவரி 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தையொட்டிய மணல்வெளியில் நடைபெற்றது. இதில், அறநிலையத்துறை அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, வரும் ஜனவரி மாதம் 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.