காஞ்சிபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2016 11:11
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகரில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் ஆற்று திருவிழா விசேஷமாக, 10 நாட்கள் நடைபெறும். கோவிலின் பழமையான தேர் பழுதடைந்ததை அடுத்து, 11 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடந்தது. அப்பகுதி வாசிகள் முயற்சியால் தேர் சீர் செய்யப்பட்டுள்ளது. நேற்று இந்த புதிய தேரை, அப்பகுதியிலுள்ள பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டம் நடத்தினர்.