சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பதினெட்டு படிகள் தெய்வீகமானவை. ஒவ்வொரு படியிலும் ஒரு தெய்வம் வசிப்பதாக ஐதீகம்.
படி தெய்வம் சிறப்பு
1. நாகயட்சி சாஸ்தாவின் பரிவார தெய்வமான இவளுக்கு குளத்துப்புழை, அச்சன்கோவிலில் சன்னிதி உள்ளது. 2. மகிஷாசுரமர்த்தினி துர்க்கையம்மனின் அம்சமான இவள், மகிஷாசுரனை வதம் செய்து உலகை காத்தவள். 3. அன்னபூர்ணா அன்னதான பிரபுவான மணிகண்டன் தன் பக்தர்களுக்கு உணவளித்தால் மகிழ்வார். அந்த அன்னத்துக்கு அதிபதி இவள். 4. காளி படைத்தல், அழித்தலுக்கு இவள் அதிபதி. தன் பக்தனுக்கு அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்பாள். 5. கிருஷ்ணகாளி பயப்படச் செய்யும் உருவத்துடன் பக்தர்களின் பயத்தைப் போக்குபவள். 6. சக்தி பைரவி பார்வதி தேவியின் உக்ர வடிவம் கொண்டவள். யட்சி என்றும் பெயருண்டு. சபரிமலையில் சன்னிதி இருக்கிறது. 7. கார்த்தவீர்யாஜுனர் இவர் தன் குருநாதரான தத்தாத்ரேயரின் வழிகாட்டுதல்படி, சாஸ்தா வழிபாட்டில் ஈடுபட்டவர். 8. கிருஷ்நாபன் கருப்பசுவாமி என்றும் பெயர் உண்டு. சாஸ்தாவின் பூதசேனை தலைவர் மற்றும் பாதுகாவலர். 9. இடும்பன் அசுர குலத்தைச் சேர்ந்த இவர் அவர்களின் தலைமை குருவாகவும், போர்வீரராகவும் திகழ்ந்தவர். முருகன் அருள் பெற்றவர். 10. வேதாளம் பேய், பூதங்களின் தலைவர். பைரவ அம்சம் கொண்டவர். சாஸ்தாவின் பரிவார தெய்வம். 11. நாகராஜா நாகங்களின் தலைவர். இவரை வழிபட்டால் சர்ப்பதோஷம் விலகும். 12. ரேணுகா தேவி சபரிமலை கோவில் கட்டிய பரசுராமரின் தாய். ரேவண சித்தரிடம் ஐயப்ப மந்திரத்தை உபதேசமாகப் பெற்றவள். 13. ஸ்வப்ன வராகி ஐயப்ப பக்தர்களின் கனவில் தோன்றி அவர்களுக்கு நல்வழி காட்டுபவள் 14. பிரத்யங்கிராதேவி காளியை விட உக்ர தெய்வம். பக்தர்களைக் காப்பதில் தன்னிகரற்றவள். 15. பூமாதேவி வராகப்பெருமாளின் மனைவி. நெற்கதிர் ஏந்திய இவள் வளமான வாழ்வு தருபவள். 16. அகோரம் அழகானவர். அஸ்திர தேவர் என்றும் பெயருண்டு. ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு தருபவர். 17. பாசுபதம் சிவபெருமானின் வில். பகைவர்களை அழிக்கும் சக்தி கொண்டது. 18. மிருத்யுஞ்ஜயம் சிவனின் ஆயுதம். விரும்பியதை அடையச் செய்யும். உடல்நலம் கொடுக்கும். பக்தனை தெய்வநிலைக்கு உயர்த்தும்.