மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவ தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2016 11:11
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் இவ்வாண்டு துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருத்தேரோ ட்டம் நடைபெற்றது. சுவாமி,அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினர். மாலை திருவாவடுதுறை ஆதீனம் 24வது கு ருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பண்டாரசன்னதி சுவாமிகள் வடம்பிடித்து திருத்தேரோட்டத்தை தொடங்கி வைக்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க திருத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆதீன தம்பிரான் சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதே போல மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந் தமான ஸ்ரீஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினர். தருமை ஆதீனம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் திருத்தேர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க பக்த ர்கள் வடம்பிடித்து திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் கோயில் கண்காணிப்பாளர் நடராஜன், பொறியாளர் ரமேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.