உத்தரகோசமங்கை கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2016 11:11
கீழக்கரை: உத்தரகோசமங்கை மஙகளநாதர் சுவாமி கோயில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயில்களில் வெளிமாநில, மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். தீபாவளி பண்டிகைக்கு பின் விரதம் இருந்து ஐயப்ப சுவாமிக்காக இருமுடி ஏந்தி சபரிமலை செல்லும் பக்தர்கள், ராமேஸ்வரம் வரும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டு கோயில்களிலும் தரிசனம் செய்து விட்டு திரும்புகின்றனர். சென்னை பக்தர் தாமேதரன் கூறுகையில், கார்த்திகை முதல் தேதியில் மாலையணிந்து செல்வது வழக்கம். நாங்கள் 10 நாட்களுக்கு முன்னதாகவே மாலையணிந்து, கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக கார்த்திகை முதல் தேதியன்று சபரிமலை செல்கிறோம், என்றார். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புண்ணியஸ்தலங்களை நோக்கி ஐயப்ப பக்தர்களின் கூட்டம் வரத் துவங்கியுள்ளது.