திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் இன்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருவனந்தல் பூஜை நடக்கிறது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை முதல் தேதியான இன்று முதல் திருவனந்தல் சிறப்பு பூஜை துவங்குகிறது. இதையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு நடைதிறப்பு, திருவனந்தல் பூஜை நடக்கிறது. சுவாமி தங்கப்பல்லக்கில் பள்ளியறை செல்லுதல் நடக்கிறது. திங்கள்கிழமை தோறும் சோமவார மண்டபத்தில் சிறப்பு அபிேஷகம் , தீபாராதனை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு, 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.