ஈரோடு: ஈரோடு, கஸ்பாபேட்டை ஸ்ரீமாருதி நகரில் வித்யா கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில் யாக பூஜைகள் நடக்கிறது. நாளை (20ம் தேதி) காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8:00 மணி முதல் அன்னதானம் நடக்க உள்ளது.