பதிவு செய்த நாள்
19
நவ
2016
12:11
பவானி: பவானி, பெரியவடமலைபாளையம் ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பவானி, ஜம்பை, பெரியவடமலைபாளையத்தில் அமைந்துள்ள ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 16ல் தொடங்கியது. விக்னேஸ்வர ஆராதனை, மஹாசங்கல்பம், கணபதி ஹோமம், முதற்கால யாக பூஜை நடந்தது. மறுநாள் மாலை, அம்மனுக்கு ஊர் பொதுமக்கள் சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:15 மணிக்கு, ஓங்காளியம்மன், விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கும், கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பவானி, ஜம்பை, தளவாய்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.