பதிவு செய்த நாள்
22
நவ
2016
02:11
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, நேற்று சிவன் கோவில்களில், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. உடல் நலக்குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா, செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக, குணமடைந்தார். சில தினங்களுக்கு முன், தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் முழுமையாக குணமடைந்து, விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக, அனைத்து சிவன் கோவில்களிலும், நேற்று ஸ்ரீம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தும்படி, கட்சி தலைமை உத்தரவிட்டது. அதன்படி, நேற்று பெரும்பாலான சிவன் கோவில்களில், கட்சி நிர்வாகிகள் சார்பில், ஸ்ரீம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தப்பட்டது. - நமது நிருபர் -