விக்கிரவாண்டி: புவனேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலபைரவர், புவனேஸ்வரர், புவனேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலபைரவருக்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, மகா தீப ஆராதனை நடந்தது. பூஜைகளை சின்னதச்சூர் சங்கர் குருக்கள் செய்தார்.